கல்முனைப்பிராந்தியத்தில் 621 கொரோனா தொற்றாளர்!

- அக்கரைப்பற்று: 303 கல்முனை: 105 அட்டாளைச்சேனை: 63

கிழக்கு மாகாணத்திலுள்ள நான்கு சுகாதார பிராந்தியங்களுள் கல்முனைப்பிராந்தியத்தில் தினம் தினம் கொரோனாத் தொற்று அதிகரித்துவருகிறது. 13சுகாதாரப் பிரிவுகளைக்கொண்ட கல்முனைப் பிராந்தியத்தின் தொற்றுக்களின் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. கல்முனைப் பிராந்தியத்துள் வருகின்ற அக்கரைப்பற்றுக் கொத்தணியில் 578பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதி பிராந்தியத்தின் ஏனைய சுகாதாரப் பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் வழங்கிய நேற்று (22) காலை 10மணி வரையான தரவுகளின்படிபிராந்தியத்தில் அதிகூடிய தொற்றுக்களைக் கொண்ட பிரிவாக 303 தொற்றுக்களைக் கொண்ட அக்கரைப்பற்று காணப்படுகிறது.

இரண்டாவதாக கல்முனை மாநகர எல்லைக்குள் 105 தொற்றுக்கள் அதிகரித்திருக்கிறது. கல்முனைதெற்கில் 87பேரும் சாய்ந்தமருதில் 28பேரும் கல்முனை வடக்கில் 10 பேரும்தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதேவேளை அட்டாளைச்சேனையில் 63, பொத்துவிலில் 38ஆகவும் உயர்ந்துள்ளது. உல்லைப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பில் 22 பேரும் இறக்காமத்தில் 23 பேரும் திருக்கோவிலில் 13 பேரும் சம்மாந்துறையில் 14 பேரும் காரைதீவில் 8பேரும் நிந்தவூரில் 7 பேரும் நாவிதன்வெளியில் 3 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்னும் பெறப்பட்ட பிசிஆர் சோதனைகளின் பெறுபேறு கள் கிடைக்கப்பெறவில்லை. அவை வந்தால் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையிலிருந்து இதுவரை வைத்தியசாலை ஊழியர்கள் 8 பேருக்கும் நோயாளிகள் 7 பேருக்குமாக மொத்தம் 15பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 88 பேரும் புதிதாக உருவா க்கப்பட்ட மருதமுனைசிகிச்சை நிலையத்தில் 99 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நுரைச்சோலை நிலையம் தயாராகிவருகிறது. இதுவரை கல்முனைப்பிராந்தியத்தில் இரு கொரோனா இறப்பு சம்மாந்துறையிலும் ஒலுவிலிலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை இப்பிராந்தியத்தில் 15780 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிசிஆர் சோதனை 9871 பேருக்கும் அன்ரிஜன் சோதனை 5909பேருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரைதீவு குறூப் நிருபர் சகா

Wed, 12/23/2020 - 18:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை