வூஹான் நகரில் 500,000 பேருக்கு கொரோனா பாதித்திருக்கலாம்

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகாரபூர்வப் புள்ளிவிபரங்களை விட 10 மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

சுமார் 500,000 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சீனப் பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறது. எனினும், சுமார் 50,000 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள், வூஹானிலும் இதர நகரங்களிலும் 34,000 பேரிடமிருந்து இரத்த மாதிரிகளை எடுத்துச் சோதனை நடத்தினர்.

சோதனையில் வூஹான் நகரில் உள்ள 11 மில்லியன் குடியிருப்பாளர்களில் 4.4 வீதமானவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பது கண்டறியப்பட்டது.

பிரிட்டனின் ஈஸ்ட் ஈகல் பல்கலைக்கழக ஆய்வாளர் அந்த எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகக் கணிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு உறவுகளுக்கான மன்றம், சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாகவே வெளியிடப்பட்டிருப்பதாகக் குறைகூறுகிறது. சீனா அந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்துவருகிறது.  

கடந்த 2019 கடைசியில் வூஹான் நகரிலேயே கொரோனா வைரஸ் தொற்று முதல் முறை தோன்றியமை குறிப்பிடத்தக்கது.

Thu, 12/31/2020 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை