கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 419 தொற்றாளர்கள் அடையாளம்

கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 419 தொற்றாளர்கள் அடையாளம்-419 COVID19 Cases Identified in Kalmunai RDHS So far

- அக்கரைப்பற்றில் 273 பேர் அடையாளம்; 231 பேர் சிகிச்சையில்
- அட்டாளைச்சேனையில் 51 பேர் அடையாளம்

கல்முனைப் பிராந்தியத்தில் இன்றுவரை (13) கொரோனா தொற்றளர்கள் 419  அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியளாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர், இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 577 ஜத் தாண்டியுள்ள அதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 ஆக உயர்வடைந்துள்ளது.

கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 419 தொற்றாளர்கள் அடையாளம்-419 COVID19 Cases Identified in Kalmunai RDHS So far

பொத்துவில் தொடக்கம் பெரியநீலாவணை வரையான எமது சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் PCR பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. 

பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 88 பேரும் புதிதாக உருவாக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 94 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுவேளை, பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் 72 பேரும் அட்டாளைச்சேனையில் 80 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனதோடு, நுரைச்சோலை நிலையம் தனிமைப்படுத்தலுக்கு தயார்படுத்தப்பட்டு வருகிறது.

கல்முனைப் பிராந்தியத்தில் முதலாவது கொரோனா இறப்பும் பதிவாகியுள்ளது. தொடர்ந்தும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும் என்பதுடன் சகல திணைக்களங்களும் எமக்கு வழங்கிவருகின்ற ஒத்துழைப்பையும் பாராட்டுகின்றேன்.

எனவே விழிப்புணர்வுடன் தொடர்ந்தும் செயற்பட்டால் தொற்று மேலும் தீவிரமடையாமல் பாதுகாக்க முடியும் இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

(ஏ.எல்.எம். ஷினாஸ்)

Sun, 12/13/2020 - 18:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை