கொவிட்–19 பரவல் தீவிரம்: சிட்னி நகரத்தில் முடக்கம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அந்த நகர குடியிருப்பாளர்கள் உள்நுழைவதற்கு பிற மாநிலங்கள் தடை விதித்துள்ளன.

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை ஒட்டி குடும்ப ஒன்றிணைவுகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் நியு சவுத் வேல்ஸ் மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. சிட்னி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பல விமானங்கள் நேற்று ரத்துச் செய்யப்பட்டன. சிட்னியில் 83 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் நோர்தன் பீச்சஸ் பகுதியுடன் தொடர்புபட்டுள்ளது. இந்நிலையில் விக்டோரியா மற்றும் குவீன்ஸ்லாந்து மாநிலங்கள், சிட்னியிலிருந்து வருவோருக்குப் பயணத் தடைகளை அறிவித்துள்ளன. மற்ற மாநிலங்கள் 14 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிட்டுள்ளன.

கிறிஸ்மஸை ஒட்டிய பயணத் திட்டங்களில் இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறினர். ஹோட்டல்களிலும், விடுமுறைத் தலங்களிலும் செய்யப்பட்டிருந்த முன்பதிவுகள் பெருமளவில் இரத்து செய்யப்பட்டன.

அவுஸ்திரேலியாவில் 2 வாரங்களாக உள்நாட்டில் யாருக்கும் வைரஸ் தொற்றாமல் இருந்த நிலையில், சிட்னி நகரில் இப்போது வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.

Tue, 12/22/2020 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை