கொவிட்–19: ஜெர்மனியில் கிறிஸ்மஸ் முடக்கம் அமுல்

கொரோனா தொற்று சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்த நிலையில் கிறிஸ்மஸ் விடுமுறையை ஒட்டி ஜெர்மனியில் கடும் முடக்க நிலை கொண்டுவரப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை தொடக்கம் அத்தியாவசியமாற்ற கடைகள் அதேபோன்று பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

கிறிஸ்மஸை ஒட்டி கடைத்தெருக்களில் கூடும் மக்களால் சமூக அளவில் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஜெர்மனி அரச தலைவர் அங்கேலா மேர்கல் குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனியில் புதிதாக 20,200 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு மேலும் 321 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புதிய முடக்கநிலை டிசம்பர் 16 தொடக்கம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது. அந்நாட்டில் 16 மாநிலத் தலைவர்களையும் மெர்கல் சந்தித்து பேசிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ‘அவசர நடவடிக்கை எடுப்பது அவசியமாக உள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார்.

ஜெர்மனியில் ஏற்கனவே உணவு விடுதிகள், மதுபானக் கடைகள் மற்றும் ஓய்வு மையங்கள் கடந்த நவம்பர் தொடக்கம் மூடப்பட்டு உள்ளது. நாட்டில் சில பகுதிகளில் முடக்கநிலை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tue, 12/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை