நெதன்யாகு விரைவில் பஹ்ரைனுக்கு பயணம்

பஹ்ரைன் முடிக்குரிய இளவரசர் சல்மான் அல் கலீபாவின் அழைப்பின் பேரில் விரைவில் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ள விருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தைத் தொடர்ந்து பஹ்ரைனும் அண்மையில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியது. இந்த இராஜதந்திர உறவுகள் பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிரான மூலோபாயத் திட்டமாக பார்க்கப்படுகிறது.

எனினும் இதற்கு பலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ‘இந்த குறுகிய காலத்திற்குள் எமது மக்களுக்கு அமைதியின் பலனை கொண்டுதருவதில் இரு தரப்பும் உற்சாகம் கொண்டுள்ளன. அதனால் தான் பஹ்ரைனுக்கு உத்தியோகபூர் விஜயத்திற்கு அவர் (அல் கலிபா) அழைப்பு விடுத்துள்ளார். அதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பஹ்ரைனின் தூதுக் குழு ஒன்று முதல் முறையாக கடந்த வாரம் இஸ்ரேல் பயணித்திருந்தது. நெதன்யாகு கடந்த ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபியாவுக்கு இரகசியமாக பயணித்து அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் மற்றும் அங்கிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவை சந்தித்ததாக செய்தி வெளியாகி இருந்தது.

Wed, 11/25/2020 - 15:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை