எவர்டொப் ஹீரோஸ் சம்பியன்

அட்டாளைச்சேனை எவர்டொப் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டியில் எவர்டொப் ஹீரோஸ் அணியினர் வெற்றிபெற்று சம்பியனாகினர்.

எவர்டொப் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும்,அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.எல். அஜ்மல் தலைமையில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி அட்டாளைச்சேனை சஹ்றா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை சஹ்றா வித்தியாலயத்தின் அதிபரும்,லக்கி விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகருமான எம்.எஸ்.எம்.பைறுாஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற எவர்டொப் ஹீரோஸ் அணியினருக்கான பணப்பரிசு மற்றும் வெற்றிக் கிண்ணத்தினையும் வழங்கி வைத்தார்.

எவர்டொப் ஹீரோஸ், எவர்டொப் சம்பியன், எவர்டொப் கிங்ஸ், எவர்டொப் லெஜன் ஆகிய 4 அணிகளுக்கிடையில் லீக் அடிப்படையில் கடந்த வாரம் முதல் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு எவர்டொப் ஹீரோஸ், எவர்டொப் சம்பியன் ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டு விளையாடியதில் போட்டி முடிவடையும் வரை எந்த அணிகளும் கோல்களைப் புகுத்தவில்லை. இதனால் இறுதியில் இரு அணிகளுக்கும் தலா 5 தண்டனை உதை வழங்கப்பட்டதில் எவர்டொப் ஹீரோஸ் அணியினர் 5 : 4 என்ற ரீதியில் வெற்றி பெற்று இவ்வாண்டுகான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர். எவர்டொப் சம்பியன் அணியினர் இரண்டாமிடத்தினை தனதாக்கிக் கொண்டனர்.

இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.றமீஸ் உட்பட கழகத்தின் பதவி வழி உத்தியோகத்தர்கள் மற்றும் கழகத்தின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டு திறமை காட்டிய வீர்களுக்கு பரிசில்களை இதன்போது வழங்கி வைத்தனர்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Wed, 11/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை