உள்ளூர் உற்பத்தி முகக்கவசங்கள் அமைச்சர் பந்துலவிடம் கையளிப்பு

கொரோனா வைரஸ் உட்பட வைரஸ்களை உடலில் புகாமல் தடுக்கும் வகையிலான நவீன முகக் கவசங்களை தேசிய ஆராய்ச்சிக் குழுவினர் உற்பத்தி செய்துள்ள னர். நேற்றைய தினம் அதன் ஒரு தொகை முகக் கவசங்கள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பேராதெனிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் உள்ளிட்ட குழுவினர் மேற்படி முகக் கவசத்தை உற்பத்தி செய்துள்ளதுடன் இந்த முகக் கவசம் மைக்ரோ மற்றும் நெனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சாதாரண முகக் கவசங்கள் வைரஸ்களை உட்புகாமல் தடுப்பதற்கு உதவும் அதே வேளை மேற்படி நவீன வைரஸ் தடுப்பு முகக் கவசங்கள் வைரஸ்களை அழிக்கும் சல்லடையொன்றைக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி முகக்கவசத்தைக் கழுவிக் கழுவி 20 முறை உபயோகிக்க முடியும் என்றும் சுமார் ஒரு மாத காலத்திற்கு அதனை கழுவாமல் உபயோகப்படுத்த முடியும் என்றும் அதனைத் தயாரித்த குழு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மேற்படி குழுவினர் குறித்த முகக் கவசத்தின் ஒரு தொகையினை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கையளித்துள்ளனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை