கொரோனா கட்டுப்படுத்தல்; இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வெற்றிகரமானதாக காணப்படுவதாகவும், அதற்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்குத் தயாராக  இருப்பதாகவும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பரிஸ் ஹடாட் ஸர்வோஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ள வேளையில், இலங்கையின் சுகாதாரப்பிரிவு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பரிஸ் ஹடாட் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது உலக வங்கியினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு சுகாதார அமைச்சர் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

 

Thu, 10/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை