பிரான்ஸ்-போர்த்துக்கல் அணிகள் வெற்றி

யு.இ.எஃப்.ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நான்காவது கட்ட போட்டிகளில், பிரான்ஸ், போர்த்துக்கல், பெல்ஜியம், டென்மார்க் அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

இதில் குழு சி பிரிவில் குரோஷியா அணியும் பிரான்ஸ் அணியும் மோதிய போட்டியில், பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதேபோல குழு சி பிரிவில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், போர்த்துக்கல் அணியும், சுவீடன் அணியும் மோதின. இப்போட்டியில் போர்த்துக்கல் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

குழு பி பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், பெல்ஜியம் அணியும், ஐஸ்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

குழு பி பிரிவில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், டென்மார்க் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

Sat, 10/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை