தாக்குதலுக்கு முதல்நாள் CIDயுடன் ஹரீனின் தந்தை 356 செக்கன் உரையாடல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முதல் நாளான ஏப்ரல் 20 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி அதிகாரி ஒருவர் முன்னாள் அமைச்சர் ஹரீன் பெனாண்டோவின் தந்தையுடன் 356 செக்கன்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், தொலைபேசி உரையாடல் தொடர்பான சாட்சியம் முன்வைக்கப்பட்டது.

தனது தந்தை முன்கூட்டியே தகவல் அறிந்தது பற்றி தான் அவரிடம் வினவியதாகவும் அதற்கு ''உன்னை விட பல விடயங்கள் எனக்குத் தெரியும்'' தந்தை  தெரிவித்ததாக ஹரீன் பெனாண்டோ ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹரீன் பெனாண்டோ முதன்முறையாக சாட்சியளித்தார்.

குறுக்கு விசாரணையின் போது பதிலளித்த அவர், முதலாவது தாக்குதல் நடைபெற்ற போது எனது சகோதரி தொலைபேசியில் கதைத்தார். நாம் ஆலயத்திற்கு செல்ல இருந்தோம். கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கும் செல்ல இருந்தோம். தந்தை இரவு தொலைபேசியில் அழைத்து அங்கு செல்ல வேண்டாம் என்று கூறியதாக என்னிடம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது நான் பதுளையில் இருந்தேன். பிரதமருடன் தொலைபேசியில் உரையாடியதையடுத்து ஹெலிகொப்டரில் கொழும்பு வந்தேன். அப்பொழுது தந்தை தனியார் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார். தாக்குதல் குறித்து முன்கூட்டி எவ்வாறு அறிந்தீர்கள் என வினவினேன். உன்னை விட பல விடயங்கள் எனக்கு தெரியும் என்று பதிலளித்தார். சி.ஐ.டியினர் முன்கூட்டி தனது தந்தையை அறிவூட்டியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முதல் நாள் சிஐ.டி அதிகாரி நந்தலால், ஹரீன் பெனாண்டோவின் தந்தையுடன் தொலைபேசியில் உரையாடியது தொலைபேசி தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி ஆணைக்குழுவில் அறிவித்தார்.

தொடர்ந்து சாட்சியளித்த ஹரீன் பெனாண்டோ, ஆலயங்களுக்கு செல்ல வேண்டாமென தந்தை ஒருபோதும் எனக்கு கூறவில்லை. சகோதரியிடம் கூறியது பற்றி ஊடக மாநாட்டில் கூறியிருந்தேன். தன்னைப்பற்றி கருதினால் மெல்கம் ரஞ்சித் கூறிய விடயங்கள் மனதை நோகடிக்கும் வகையில் இருந்தாகவும் தாக்குதலுக்கு முன்னர் அவர் இது பற்றி அறிந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனால் தான் அவர் அத்தினத்தில் ஆராதனை நடத்தாமல் இருந்திருக்கலாம் என்றும் எனவே இது தொடர்பில் விசேட விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். ஹரீன் பெனாண்டோவின் உறவுக்கார மாணவர் ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முதல் நாள் நடந்த பயிற்சியில் கலந்து கொள்ளாதது பற்றியும் வினவப்பட்டது.

ஆவேசத்துடன் இங்கு அவர் சாட்சியமளித்ததையடுத்து அவருக்கு ஆணைக்குழு தலைவர் கடுமையாக எச்சரிக்கை செய்தார்.(பா)

 

Fri, 09/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை