கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தேசியக் கொள்கை

பாராளுமன்றில் அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று கேள்வி, பதில் அமர்வில் கலந்து கொண்டு பதிலளிக்கையிலேயே இவ் விடயத்தை அமைச்சர் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக வடக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் தொழில் நடவடிக்கை அதிகரித்துள்ளமையினால் வடக்கு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

நீண்டகாலமாக தென்னிலங்கை மீனவர்கள் பருவ காலங்களில் வடக்கு கடற்பரப்பில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற வழக்கம் காணப்படுகின்றது. அதேபோன்று வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களும் பருவ காலங்களில் தென்னிலங்கையில் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

இந்நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு கடலில் தொழிலில் ஈடுபடுகின்ற

Wed, 09/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை