கஞ்சா உற்பத்திக்கான அனுமதியை அரசு ஒருபோதும் வழங்கக் கூடாது

மதுசார எதிர்ப்புச் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

கஞ்சா உற்பத்தி திருத்தச் சட்டத்தை ஒரு போதும் அரசு திருத்த முனைய வேண்டாமென மதுசார எதிர்ப்புச் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டில் போதைப்பொருட்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென மதப் பெரியார்களும் நேற்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆயுர்வேத மருத்துவத்திற்காக கஞ்சா உற்பத்தி இலங்கையில் அவசியம் தேவையென சில சர்வதேச என்.ஜி.ஓ பின்னாலுள்ள அரசியல்வாதிகள், அயுர்வேத வைத்தியர்கள் கஞ்சா உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டுமென அண்மைக்காலமாக அரசுக்கு அழுத்தும் கொடுத்து வருகின்றமையை நாம் அவதானித்தோம்.

இதனை எமது மதுசார எதிர்ப்புச் சங்கம் வன்மையாக எதிர்ப்பதாகவும் நேற்று தெரிவித்தனர்.

நாட்டில் இரண்டாவது பிரச்சினையாக இலங்கையில் கஞ்சா பாவனையாளர்கள் பெருகி பெருமளவிலான இளைஞர்கள் அதற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் இளைஞர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். இலங்கையில் 40 வீதமான மீன்பிடியாளர்கள், பஸ் சாரதிகளும் கஞ்சா பாவிக்கின்றனர். இதனால் பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. கஞ்சா பாவனை செய்தபடியே அவர்கள் வாகனங்களை செலுத்துகின்றனர். 2019ஆம் ஆண்டில் மட்டும் 3-6 இலட்சம் கிலோ கஞ்சா இலங்கையில் பாவனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தன பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பேராசிரியருமான இத்தபானே தம்மலங்கார தேரர், கொழும்பு 07 இலுள்ள பௌத்த காங்கிரஸ் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம் மாநாட்டில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகையும், மனோ வைத்திய நிபுணர்களும் தமது கருத்துக்களை தெரிவித்தனர். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இங்கு கருத்து தெரிவிக்கையில் -

நாட்டில் கஞ்சா பயிரிடுபவர்களை, பாவனையாளர்களை,விற்பனையாளர்களை போக்குவரத்தில் எடுத்துச் செல்பவர்களை தண்டிக்கக் கூடிய தற்பொழுது அமுலிலிருக்கும் சட்டத்தை ஒருபோதும் திருத்தியமைக்க வேண்டாமென ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக் கொள்கிறோம். கஞ்சா பாவனையாளர்களை குற்றம் புரிந்தவர்களாகவே கருதல் வேண்டும். இதனைப் பயிரிடுபவர்கள், விற்பவர'களை பொலிஸார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தல் வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் ஒரு போதும் கஞ்சா உற்பத்திக்கு அனுமதியை ஆயுர்வேத வைத்தியர்களின் கோரிக்கைக்க செவிசாய்த்து அதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

தெஹிவளை,கல்கிஸ்ச விசேட நிருபர்

Wed, 09/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை