சகல அரசாங்க பாடசாலைகளும் மீண்டும் வழமைக்கு திரும்புகிறது

ஆரம்ப பாடசாலை வகுப்புகள் மட்டும் 08 ஆம் திகதி

நாட்டில் அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் இன்று (02) முதல் கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்புமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே கட்டம்  கட்டமாக குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய(02) தினம் அரசாங்க பாடசாலைகளில் தரம் 06 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று ஆரம்பமாகும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை தரம் ஒன்று முதல் தரம் 05 வரையிலான ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் (08) எட்டாம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகுமென்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக அரசாங்கம் பாடசாலைகளுக்கு விடுத்திருந்த இடைக்கால விடுமுறைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 19 முதல் அனைத்து அரசாங்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் பரீட்சைகளை கருத்திற்கொண்டு குறிப்பிட்ட வகுப்புகளுக்கு கட்டம்கட்டமாக கற்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 09/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை