வடக்கு மக்களின் தேவை சமஷ்டியல்ல வாழ்வாதார வழிகளையே கோருகின்றனர்

தேர்தல் முடிவுகள் சித்தரிப்பு – விமல்

வடக்கு தமிழ் மக்கள் சமஷ்டியை நிராகரித்து அன்றாட வாழ்வாதார சவால்களை வெற்றிக்கொள்வதற்கான வழியை கோருவதையே வடக்கு தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிப்பிட்டளவு தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ள மகத்தான வெற்றி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

எமக்கு சமஷ்டி ஆட்சியொன்று அவசியமில்லை. அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கான சவால்களை வெற்றிக்கொள்வதே தேவையாகவுள்ளது என்பதை  இந்த  தேர்தல் முடிவுகள் மூலம் வடக்கு தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதனால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வடக்கில் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.  

சம்பிரதாயப்பூர்வ மக்கள் ஆணைக்கு பதிலாக புதிய மக்கள் ஆணையொன்று இதன்மூலம் உதயமாகும். இந்த புதிய மக்கள் ஆணையையும் அதன் கருப்பொருளையும் அனைவரும் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சவாலை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் அனைவரும் பொறுப்புடன் இந்த மக்கள் ஆணையின் உண்மையான அர்த்தத்தையும் பெறுமதியையும் புரிந்து பணியாற்ற வேண்டுமென நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார். 

Mon, 08/10/2020 - 09:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை