பிரதமர் இன்று பேருவளை விஜயம்

பேருவளை தொகுதி பொதுஜன பெரமுனவின் பிரதம அமைப்பாளரும் வேட்பாளருமான பியல் நிசாந்த மற்றும் முன்னாள் பேருவளை நகர பிதாவும் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளருமான மர்ஜான் பளீல் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பேருவளைக்கு விஜயம் செய்கிறார். இதன்போது பிரதமருக்கு பேருவளை நகரில் மகத்தான வரவேற்பளிக்கப்படும்.

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பேருவளை நகர சபை வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுன வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் வேட்பாளர்களான ரோஹித்த அபேகுணவர்தன, விதுர விக்கிரமநாயக்க, மஹிந்த சமரசிங்க உட்பட கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், நகர, பிரதேச சபை தலைவர்கள் உட்பட உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Fri, 07/10/2020 - 06:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை