தனியார்துறை ஊழியர்களின் சம்பள குறைப்புக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் இணக்கமில்லை

தனியார்துறை ஊழியர்களின் சம்பளக் குறைப்புக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் இணக்கமில்லையென அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, 

நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஊழியர்களின் சம்பளக் குறைப்புத் தொடர்பில் தொழிற்சங்கங்கள், தொழில் அமைச்சர் மற்றும் முதலாளிமாரும் இணங்கியுள்ளதாகவும் இதனை பின்பற்றல் செப்டெம்பர் மாதம் வரை அமுலில் இருக்குமெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவையாகும். 

கடந்த ஜுலை 8ஆம் திகதி தேசிய தொழில் ஆலோசகர் சபை தொழில் அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையில் கூடியது. இதன்போது பிரதானமாக பேசப்பட்டதாவது,

தனியார் துறை ஊழியர்களுக்கு தமது சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது 14,500 ரூபா பெற்றுக்கொடுப்பதை ஜுலை மாதம் முதல் செப்டெம்பர்வரை நீடிப்பது குறித்தாகும். 

மே மற்றும் ஜூன் மாதங்களில் சம்பளத்தை வழங்குவதில் முதலாளிமார் மோசமாக நடந்துக்கொண்டுள்ளதால் இந்தச் சம்பள குறைப்புக்கு இணங்க வேண்டாமென அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் சட்டத்தரணி ஜானக அதிகாரி கேட்டுக்கொண்டிருந்தார். 

பல தொழிற்சங்கங்கள் எமது நிலைபாட்டிலேயே இருந்தன. அதனால் அனைத்துத் தொழிற்சங்களும் சம்பள குறைப்புக்கு இணங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளமை பொய்யான விடயமாகும் எனவும் அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Sat, 07/18/2020 - 07:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை