யுத்த ஓய்வுக்கு பின்னர் இந்து ஆலயங்கள் சிறப்புற பிரதமர் மஹிந்தவே காரணம்

இந்து மத பீடம் நன்றி தெரிவிப்பு 

இலங்கை நாட்டில் முப்பது வருட காலமாக யுத்தம் புரையோடி இருந்தகால கட்டத்தில் இந்து ஆலயங்கள் பூஜை வழிபாடுகள் நிகழ்த்துவதற்கு பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருந்தன. மிக பிரபல்யமான ஆலயங்களில் கூட திருவிழாக்கள் செய்வதற்கும் சிரமப்பட்டன. அப்போதைய ஜனாதிபதியும் இப்போதைய பிரதமருமான  மஹிந்த ராஜபக்சவின்   தலமையின் கீழ் நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 

இதனால் பக்தர்கள் செல்ல முடியாது இருந்த தமது குலதெய்வ வழிபாட்டு ஆலயங்களுக்கு சென்று தமது பிரார்த்தனைகளை செய்யக்கூடிய சமாதான சூழ்நிலையை விரும்பிய இடங்களில் எல்லாம் வழிபடுவதற்கான போக்குவரத்து பாதைகளை ஏற்படுத்தி, இந்து மக்கள் தமது ஆலய வழிப்பாட்டுக்கான இயல்பான சூழ்நிலையை உருவாக்கியவர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆவார்.   இந்து மக்கள் எப்பொழுதும் பிரதமரின் இந்த அர்ப்பணிப்புடனான சேவைக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறார்கள் என இந்து மத பீடத்தின் செயலாளர் சிவ ஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.   

Mon, 07/06/2020 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை