மட்டு. மாவட்டம் தேர்தல்; 32 தலைமைதாங்கும் அதிகாரிகளுக்கு ஐந்து வருட தேர்தல் கடமை தடை

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கெடுப்பு நிலைய கடமையில் கவனயீனமாக செயற்பட்ட 32  தலைமைதாங்கும் தேர்தல் கடமை உத்தியோகத்தர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு தேர்தல் கடமை தடை செய்யப்பட்டிருப்பதாகவும் இத்தேர்தலிலும் இந்த தவறுக்கு இடமளிக்கப்படக் கூடாதெனவும் மட்டு. மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல் கூட்டம், தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.இக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்,சசீலன், கருத்து வெளியிடுகையில்

தொடர்ந்து பேசிய அவர்,...

மாற்று திறனாளிகள் வாக்களிக்க போக்குவரத்து வசதி செய்ய முன்கூட்டியே வைத்திய அத்தாட்சிப்பத்திரம் சமர்ப்பிக்குமாறு பிரதேச மட்ட தேர்தல் ஏற்பாடு உத்தியோகத்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அத்துடன் பிரதான வாக்கெண்ணும் உத்தியோகத்தர்களின் கடமைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பிரிவுக்கான கடமைகளுக்கு மேலதிகமாக இம் முறை அக்கடமைகளை செய்ய பிரதேச செயலாளர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.

மட்டக்களப்பு சுழற்சி நிருபர்

Wed, 07/08/2020 - 07:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை