மிசிசிப்பி மாநில கொடியின் சின்னத்தை நீக்க ஒப்புதல்

நிறவெறிக்கு எதிரான நடவடிக்கை:

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலக் கொடியில் இருக்கும் கூட்டமைப்பு சின்னத்தை நீக்குவதற்கு அந்த மாநில எம்.பிக்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் அதனை சட்டமாக அமுல்படுத்துவதற்கு தாம் கையொப்பம் இடுவதாக அந்த மாநிலத்தின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர் டேட் ரீவ்ஸ் முன்னதாக கூறியிருந்தார்.

இந்தக் கூட்டமைப்பு சின்னத்தை தமது மாநிலக் கொடியில் பயன்படுத்தும் கடைசி மாநிலமாக மிசிசிப்பி உள்ளது.

இந்த சின்னத்தை ஒரு இனவாத அடையாளமாகவே பலரும் பார்க்கின்றனர். இதனைப் பயன்படுத்துவது குறித்து அண்மைய நிறவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் விவாதங்கள் வலுத்தன.

அமெரிக்க சிவில் யுத்தத்தில் (1861–65) தோல்வி அடைந்த அடிமைகளை வைத்திருந்த மாநிலங்களே இந்த சின்னத்தை பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சின்னத்தை அகற்றுவதற்கு ஆதரவாக 91–23 வாக்குகள் பதிவாகின. பின்னர் அது செனட்டில் 37–14 என வெற்றிபெற்றது.

 

Tue, 06/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை