லா லிகா கால்பந்து தொடர் : பாசிலோனா அணி மீண்டும் முன்னிலை

லா லிகா கால்பந்து போட்டியில் பாசிலோனா அணி 68 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பாசிலோனாவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சம்பியனான பாசிலோனா கழக அணி 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் கழகத்தை வீழ்த்தியது. 71-வது நிமிடத்தில் பாசிலோனா தலைவர் லயனல் மெஸ்சி கடத்தி கொடுத்த பந்தை மாற்று ஆட்டக்காரர் இவான் ராகிடிச் கோலாக்கினார். நேற்றுமுன்தினம் தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடிய மெஸ்சிக்கு இந்த வெற்றி பிறந்தநாள் பரிசாக அமைந்தது. 31-வது ஆட்டத்தில் ஆடிய பாசிலோனா 21 வெற்றி, 5 டிரா, 5 தோல்வியுடன் 68 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. முன்னாள் சம்பியனான ரியல் மட்ரிட் அணி 30 ஆட்டத்தில் விளையாடி 19 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 65 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு இறங்கியது

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை