சீன அதிகாரிகளுக்கு தடை: அமெரிக்க செனட் ஒப்புதல்

ஹோங்கொங்கின் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சீன அதிகாரிகள், வர்த்தகங்கள் மீது தடை விதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

ஹோங்கொங்கில் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்த பீஜிங் முடிவெடுத்ததையடுத்து, அத்தகைய சட்டமூலம் மீதான வாக்களிப்பு இடம்பெற்றது. தடைவிதிப்பதற்கான சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஹோங்கொங்கில் மனித உரிமைகளைக் காப்பதும், அதன் சிறப்புத் தகுதியைக் காப்பாற்றும்படி சீனாவிற்கு நெருக்குதல் அளிப்பதும் இதன் நோக்கமாகும். மிக விரைவில் ஹோங்கொங்கில் அந்தச் சட்டத்தைச் சீனா அமுல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு பிரதிநிதிகள் சபையின் ஒப்புதல் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கையொப்பம் பெறப்படல் வேண்டும்

Sat, 06/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை