புர்கினா பாசோ சந்தையில் துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி

புர்கினா பாசோவில் கால்நடைச் சந்தை ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

கொபியன்கோ நகரில் கடந்த சனிக்கிழமை மதியம் மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் சந்தையில் இருக்கும் கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருப்பது என்பது தெரியவில்லை என்றபோதும் அந்நாட்டில் அண்மைக் காலத்தில் சமூகங்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் ஜிஹாதிக்களின் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

இந்த வன்முறையால் நூற்றுக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலி நாட்டு எல்லைக்கு அருகில் நாட்டின் வடக்கில் வர்த்தகர்களின் வாகனத் தொடரணி ஒன்றின் மீது ஜிஹாதிக்கள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

 

Tue, 06/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை