Tele Presence மூலம் வழக்குகள் விசாரணை

Tele Presence தொழில்நுட்பம் மூலம் சிறைச்சாலைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கிடையில் தொடர்பாடல் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

சிறு மற்றும் குறுகியகால தண்டனைகளைப் பெற்றுவரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் தினமும் சுமார் 400 பேர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப் படுகின்றனர்.

அதேவேளை நீதிமன்றங்களில் இதனால் நெருக்கடிகள் அதிகரிப்பதுடன் குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாமல் கைதிகளை பாதுகாப்பதும் எமது பொறுப்பாகும். அத்துடன் நீதிமன்றங்களில் கொரோனா வைரஸ் உட்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

அதற்கிணங்க டெலிகொம்நிறுவனத்தோடு இணைந்து தெளிவான புகைப்படம் எடுக்கப்பட்டு Tele Presence 4K, HD Video தொழில்நுட்பம் மூலம் சிறைச்சாலைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு மத்தியில்தொடர்பை ஏற்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 05/02/2020 - 11:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை