விமானம் பழுது பார்க்க உக்ரைன் பொறியியலாளர்கள் வருகை

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் வகை விமானத்தை பழுது பார்ப்பதற்காக உக்ரைன் பொறியியலாளர்கள் 06 பேரை ஏற்றிய விமானமொன்று, இன்று (08) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இவ்வாறு வருகை தந்துள்ள பொறியியலாளர்களுக்கு உக்ரைனினால் தனிமைப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள போதிலும், இலங்கையில் மீண்டும் அவர்களை தனிமைப்படுத்துவதற்காக நீர்கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

உக்ரைன் பொறியியலாளர்கள் தனிமைப்படுத்தலை முடித்த பின்னர்,  இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, பயன்படுத்தல் காலம் நிறைவடைந்த அன்டனோவ் ஏ.என். 32 விமானங்கள் மூன்றை பரிசோதித்து பழுது பார்ப்பதற்காக உக்ரேனுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

உக்ரைன் பொறியியலாளர்களை ஏற்றி வந்த விமானம் இன்று அதிகாலை மீண்டும் கியேவ் (Kyiv) நகர் நோக்கி புறப்பட்டபோது, கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோய் காரணமாக தங்களது நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த உக்ரைன் பிரஜைகள் 116 பேரைக் ஏற்றிக்கொண்டு புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Fri, 05/08/2020 - 13:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை