இஸ்ரேலுக்கான சீன தூதுவர் திடீர் மரணம்

இஸ்ரேலுக்கான சீன தூதுவர் டு வெய் (Du Wei) வடக்கு டெல் அவிவ் இலுள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டதாக,  இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டிற்கான சீன தூதுவராக இருந்தவர் டு வெய் (58). கொரோனா பாதிப்புக்கிடையே இவர் கடந்த பெப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான சீன தூதுவராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு முன் உக்ரைன் நாட்டின் தூதுவராக அவர் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் அவர் வீட்டில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார்.

டு வெய்க்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இவர்கள் இஸ்ரேலில் இல்லை என, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

Sun, 05/17/2020 - 19:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை