நாடு திரும்பும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுங்கள்

வெளிநாட்டிலுள்ள இலங்கையரிடம் வெளிவிவகார அமைச்சின் செயலர் வேண்டுகோள்

கொவிட்-19 அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு நாடு திரும்ப தீர்மானித்துள்ளவர்கள் தமது தொழில் மற்றும் கல்வியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் சிந்தித்து தமது பயணத்திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது.

இதற்கமைய 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதில்  28 ஆயிரம் பேர் புலம்பெயர்  தொழிலாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை ரூபவாஹினியில் 'நியுஸ் எட் 9' எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது-

இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட ஏற்பாடுகளைக் கருத்திற்கொண்டு வெளிநாட்டிலுள்ள பலரும் அவசரமாக நாடு திரும்ப முற்படுகின்றனர். இதனால் அவர்கள் இழக்கும் தொழில் மற்றும் கல்வி அதன் தாக்கம் என்பன தொடர்பில் அவர்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

சட்டவிரோதமாக வெ ளிநாடுகளுக்குச் சென்றவர்களுக்கு அந்நாட்டினால் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் கிடைக்காததனால் அவர்கள் மீண்டும் நாடு திரும்ப விரும்புகின்றனர். எனினும் தொழிலில் உள்ளவர்கள் கொரோனா பாதிப்பைத் தவிர்க்கும் பொருட்டு குறுகிய கால விடுமுறைக்காக இலங்கை வர விரும்பியுள்ளனர். இதனால் அவர்கள் தமது தொழில் மற்றும் கல்வியை இழக்க நேரிடும்.எனவே தற்போதைய சூழ்நிலையில் நாடு திரும்புவதன் அவசியம் தொடர்பில் நன்கு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

லக்ஷ்மி பரசுராமன்

Thu, 05/21/2020 - 07:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை