அடக்கு முறைக்கோ, பணத்திற்கோ அதிகாரிகள் அடிபணியக் கூடாது

சேதனப்பசளை அறிமுகம் 

விவசாயத் திணைக்களம் சேதனப்பசளையை விவசாயிகளுக்கு  அறிமுகம் செய்து வருகிறது இந்த விடயத்தில் அதிகாரிகள் அடக்கு முறைக்கோ அல்லது பணத்திற்கோ அடிப்பணியக் கூடாதென கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜகம்பத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கந்தளாயக் பிரதேசத்தில் 500 ஏக்கரில் சேதனப்பசளையை பாவிக்கும் முன்மாதிரி விவசாயச் செய்கை இடம்பெற்று வருகிறது. அச் செய்கையை நேற்று முன்தினம் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,...

நஞ்சுக்கலப்பற்ற உணவுப் பொருளை உற்பத்தி செயவதற்கும், உண்பதற்கும் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் சட்ட ரீதியான உரிமை இருக்கிறது.

விவசாயத் திணைக்களம் சேதனப் பசளையைக் கொண்டு செய்கை பண்ணப்படும் விவசாய முறைப்பற்றி பூரண அறிவை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.அது தெரியாததாலே இரசாயனப் பசளையைத் தேடி அலைகிறார்கள். நீதிக்கும் நியாயத்திற்கும்விரோதமாய் செயற்படுவோரை கிழக்கு மாகாணத்திலிருந்து அகற்ற வேண்டும்.

நாட்டில் நஞ்சற்ற உணவுப் பொருளுக்கு விலை அதிகம். அவ்வாறான பொருட்களை தாராளமாக உற்பத்தி செய்து சந்தைக்கு விடும்போது அதன்விலை  தானாக குறைந்துவிடும். ஆதலால், நஞ்சற்ற உணவுப் பொருட்களை தாராளமாய் உற்பத்தி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் முன்வர வேண்டும் என்றார்.

புளியந்தீவு குறூப் நிருபர்

Wed, 05/20/2020 - 12:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை