எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் கடும் மழை எதிர்பார்ப்பு

இலங்கையை அண்டிய கீழ் வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் குறைந்த அழுத்த காற்று அடர்த்தியாதல் காரணமாக, எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது, இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடுமென்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்தோடு, நாட்டின் ஊடான காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகம் வரை வீசக் கூடுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இடி, மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள  பொதுமக்கள் போதியளவான முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
 

Thu, 05/21/2020 - 17:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை