கடற்படையினரின் உறவினர்கள் 162 பேர் தனிமைப்படுத்தல் பூர்த்தி

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடற்படையினரின் 35 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர், தங்களது தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்துகொண்டு, நேற்று (14) வெளியேறியுள்ளனர்.

பெல்வூட் இளைஞர் சேவை சபைக்கு சொந்தமான விடுதியில் அமைந்துள்ள கடற்படையினரின் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த  11 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரும், ரன்மினிதென்ன கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த  02 குடும்பங்களைச் சேர்ந்த 09 பேரும், ஹபராதுவ பொலிஸ் கட்டடத்திலிருந்த 05 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும், மிஹிந்தலை கடற்படை விடுமுறை விடுதியிலிருந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேரும் ‘வெலிகம்  பே’  கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த  05 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேரும், அநுராதபுரம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த  கடற்படையினரின்  குடும்பங்களைச் சேர்ந்த  04 பேரும்  தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்துகொண்டு சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறு தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்தமைக்காக அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கடற்படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர், தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து, கடற்படையினரின் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ள போதிலும்,  அவர்கள் அனைவரும் மேலும் 14 நாட்களுக்கு அவர்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 

Fri, 05/15/2020 - 17:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை