சொகுசு விடுதியில் கிம் சிகிச்சை?

ரயில் படத்தால் மர்மம் நீடிப்பு!

ஆசிய நாடான வட கொரியாவின் தலைவர்  கிம் ஜாங்க் உன்  36  உடல்நிலை குறித்து பல்வேறு புரளிகள் பரவி வரும் நிலையில்  நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு அருகே  அவருடைய ரயில் நிறுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வட கொரியாவின் தலைவரான  கிம் ஜாங்க் உன்  இம்மாதம்  14ம் திகதி முதல்  பொது நிகழ்ச்சிகளில் ஏதும் பங்கேற்கவில்லை. இம்மாதம்  15ம் திகதி  அவருடைய தாத்தாவும்  வடகொரியா நிறுவனருமான கிம் இரண்டாம் ஜாங்கின்  108வது பிறந்த நாள் நிகழ்ச்சியிலும்  உன் பங்கேற்கவில்லை.அதையடுத்து  அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக  செய்திகள் பரவின.இது தொடர்பாக  வடகொரிய ஊடகங்கள் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில்  தென் கொரியா ஊடகங்கள் பல்வேறு யூகங்களை  செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.

கடந்த  2011ல் தன் தந்தை  இரண்டாம் கிம் ஜாங்கின் மறைவுக்குப் பிறகு  நாட்டின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட  உன்  இதற்கு முன்பும்  இவ்வாறு சில காலம் காணாமல் போனார்.அவருடைய உடல்நிலை குறித்து  பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில்  வட கொரியாவின் கிழக்கு கடலோரத்தில் உள்ள வோன்சானில்  உன்னின் சொகுசு விடுதிக்கு அருகே அவருடைய ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளன. தென்கொரியாவைச் சேர்ந்த  ஒரு இணையதளம்  'சாட்டிலைட்' புகைப்படங்களை ஆதாரமாக காட்டி  செய்தி வெளியிட்டுள்ளது.இந்த ரயில் அங்கு நிறுத்தப்பட்டிருந்தாலும்  கிம் ஜாங்க் உன்  அங்கு இருக்கிறாரா போன்ற விபரங்கள் உறுதி செய்யப்படவில்லை. அதனால்  உன் தொடர்பான மர்மம் விலகவில்லை.

Tue, 04/28/2020 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை