நாளை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கம்

விடுமுறையில் சென்றுள்ள முப்படை அதிகாரிகளை முகாம்களுக்கு அழைப்பதனை இலகுபடுத்தும் வகையில் நாளை (27) திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில் ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் 27 முதல் மே 02 வரை தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் மே 04 வரை அமுல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில், அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்வோர் அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லல் உள்ளிட்ட விடயங்கள் செவ்வாய்க்கிழமை (28) முதல் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 04/26/2020 - 20:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை