மூன்றாம் உலக நாடுகளை விடவும் மோசமான நிலையில் அமெரிக்கா!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தோல்வி!

அமெரிக்க அரசு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைந்து வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளன. மூன்றாம் உலக நாடுகளை விட மிக மோசமாக அமெரிக்காவின் நிலை உள்ளது என்று உலக நாடுகள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளன.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. உலகம் முழுக்க மொத்தம் 8 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

உலகம் முழுக்க மொத்தம் சுமார் 38 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இத்தாலியில் அதிகமாக 101,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 11519 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 164,359 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். 3197 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் அதிகமாக நியூயோர்க்கில் 67,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1392 பேர் பலியாகி உள்ளனர்.

அடுத்ததாக நியூ ஜெர்சியில் 16,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 198 பேர் பலியாகி உள்ளனர். கலிபோர்னியாவில் 7,426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்க அரசு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைந்து வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த தெரியாமல் அந்நாடு திணறி வருகிறது. இது மிக மோசமான தோல்வி. அமெரிக்காவின் உண்மையான பலம் இப்போதுதான் தெரிகிறது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இந்த வைரஸ் தாக்குதலை அமெரிக்க சரியாக எதிர்கொள்ளாததற்கு  ட்ரம்பின் அலட்சியம் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதமே அமெரிக்காவிற்கு கொரோனா பாதிப்பு குறித்து எச்சரிக்கப்பட்டது. பெப்ரவரி 15ம் திகதிதான் அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா வந்தது. ஆனாலும் கூட, நிறைய காலம் இருந்தும் கூட அமெரிக்கா கொரோனாவிற்கு எதிராக சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யவில்லை.  முதல் 10 நோயாளிகளின் உறவினர்கள் யாரும் சோதனை செய்யப்படவில்லை. அவர்கள் சந்தித்த நபர்கள் யார் என்று சோதனை செய்யப்படவில்லை. அவர்கள் எங்கே சென்று வந்தார்கள், எப்படி கொரோனா வந்தது என்று கூட சோதனை செய்யவில்லை.

அதே போல் மோசமான மருத்துவ வசதியும் அமெரிக்காவின் இந்த மோசமான நிலைக்கு காரணம் ஆகும். அங்கு பொது சுகாதாரம் மிக மோசமான நிலையை உள்ளதை இந்த கொரோனா வெளிப்படையாக உலகிற்கு காட்டியுள்ளது. மக்களுக்கு போதுமான காப்புறுதி வசதிகள் இல்லை. அதேபோல் போதிய எண்ணிக்கையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை. மிக முக்கியமாக பல்வேறு துறைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லை. அதேபோல் தற்போதும் கூட கொரோனாவிற்கு சோதனை செய்ய அமெரிக்கா பெரிய கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

அமெரிக்காவின் ஊநவெநசள கழச னுளைநயளந ஊழவெசழட யனெ Pசநஎநவெழைn (ஊனுஊ) என்று அழைக்கப்படும் மத்திய நோய் கட்டுப்பாட்டு நிலையம் மட்டும்தான் கொரோனா சோதனைகளை செய்யும் என்று கட்டுப்பாடு இருந்தது. அதாவது 50 மாநிலங்களில் கொரோனா சோதனை செய்ய முடியாது. அட்லாண்டாவில் மட்டும்தான் கொரோனா சோதனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது.

இன்னொரு பக்கம் அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திற்கு கவர்னர்கள், செனட்டர்கள் உள்ளனர். இவர்களுக்கும் இடையிலும் கருத்து வேறுபாடு, முடிவு எடுக்கும் அதிகாரத்தில் குழப்பங்கள் இருந்தன. கொரோனாவிற்கு எதிராக யார் சொல்வதை யார் கேட்பது என்று குழப்பம் இருந்தது. இந்த மோசமான அரசியல் போட்டியும், இந்த போரில் அமெரிக்கா தொடர்ந்து தோல்வி அடைய முக்கிய காரணம் ஆகும்.

Wed, 04/01/2020 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை