புதிய ஊரடங்கு அனுமதிப்பத்திரம் ஏப்ரல் 30 வரை நடைமுறை

புதிய ஊரடங்கு அனுமதிப்பத்திரம் ஏப்ரல் 30 வரை நடைமுறை-New Curfew Regulation Until Apr 30

ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரத்திற்கான புதிய நடைமுறையை ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நிறைவு செய்யவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அது வரை, துறைமுகம், கப்பல் நிறுவனம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு, சுகாதாரம், பெற்றோலியம், தொலைத்தொடர்பு, மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம், இலங்கை போக்குவரத்துச் சபை, புகையிரத சேவை, திறைசேரி, மத்திய வங்கி உள்ளிட்ட அரசாங்க மற்றும் தனியார் வங்கிகள், ஊடகங்கள் போன்ற அரச மற்றும் தனியார் பிரிவினரால் நடத்திச் செல்லப்படும் அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாக தங்களின் நிறுவன அடையாள அட்டைகளை பயன்படுத்துவதற்காக ஏப்ரல் 10ஆம் திகதி வரை வழங்கப்பட்ட கால அவகாசம் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Wed, 04/08/2020 - 10:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை