கொரோனா ஒழிப்புக்கு ஜப்பானிடமிருந்து 1.2 மில். டொலர்

கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக இலங்கை அரசாங்கத்திற்கு, ஜப்பான் அரசாங்கம்  1.2 மில்லியன் அமெரிக்க டொலர்  நன்கொடையாக வழங்கியுள்ளது.

வளர்முக  நாடுகளில் சுகாதார, வைத்திய சேவைகளை வலுப்படுத்தும் வகையில், குறித்த நன்கொடைகள் வழங்கப்படுவதாக, ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, யுனிசெப் (UNICEF) மூலம் 500,000 அமெரிக்க டொலரும்,  சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (International Organization for Migration) மூலம் 422,500 அமெரிக்க டொலரும்,  சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சம்மேளனம் (International Federation of Red Cross and Red Crescent Societies) மூலம் 250,000 அமெரிக்க டொலரும்  நன்கொடையாக வழங்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில்  பரவி வரும் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக செயல்பாடுகளுக்கு உதவ ஜப்பான் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 04/22/2020 - 12:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை