குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் ரிஷாத், கபீர் மறுப்பு

விசாரணை நடத்துமாறும் கோரிக்கை

தேர்தல் நெருங்குகையில் தன்மீது வீணான குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுவது வழமையாகி விட்டதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலோ,வில்பத்து காடழிப்பிலோ தனக்கு தொடர்பு இருந்தால் உரிய விசாரணை நடத்துமாறும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரியுள்ளார்.இது தொடர்பில் ஏற்கெனவே ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த அவர், இனவாதம் மதவாதத்தை தூண்டி வாக்கு கேட்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். எனக்கும் ஸஹ்ரானுக்கும் தொடர்பு இருப்பதாக சிலர் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.நான்தான் வில்பத்து காட்டை அழித்ததாவும் கூறுகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளளேன். இதன் பின்னணியில் உள்ளவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்குமாறும் கேட்டுள்ளேன்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்குழு அமைத்தாவது உண்மைகளை வெளிப்படுத்துமாறு ரிஷாட்பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமும் மறுத்துள்ளார்.

ரிசாத் பதியுதீனுடன் இணைந்து, தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அபாண்டமானது எனவும் தேர்தல் நெருங்குவதால் இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுவதவாகும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், பௌத்த விகாரைகளுக்கும் சிங்கள மக்களும் அதிக தொண்டாற்றியுள்ளதாகவும் இதனாலே தன்மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை