நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு

நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த 15ஆம் திகதி நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி எஸ்.செல்வராஜ் தலைமையில் இடம்பெற்றது. இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி.ஏ.ஆர்.சத்தியேந்திரா கலந்துக்கொண்டு சிறப்பித்தார். இதன்போது நடைபெற்ற போட்டிகளின் விபரம் கிழ் வருமாறு.

12 வயதுக்கு கீழ்பட்ட பெண்களுக்கான போட்டிகளில் பாரதி இல்லம் முதலாம் இடத்தையும் 14 வயதுக்கு கீழ்பட்ட பெண்களுக்கான போட்டிகளில் பாரதி இல்லம் முதலாமிடத்தையும் 16 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் போட்டிகளில் இளங்கோ இல்லம் முதலாமிடத்தையும் 18 வயதுக்கு கீழ்பட்ட பெண்களுக்கான போட்டிகளில் கம்பன் இல்லம் முதலாமிடத்தையும். 20 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் போட்டிகளில் கம்பன் இல்லம் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. அணி நடை போட்டியில் பாரதி இல்லம் முதலாமிடத்தையும். கயிறு இழுத்தல் போட்டியில் கம்பன் இல்லம் முதலாமிடத்தையும்.விநோத உடை போட்டியில் முதலாமிடத்தை இளங்கோ இல்லமும் பெற்றுக்கொன்டது. போட்டிகளின் அடிப்படையில் கம்பன் இல்லம் 320 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தையும் பாரதி இல்லம் 295 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தையும் இளங்கோ இல்லம் 294 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட கம்பன் இல்லத்திற்கு மத்திய மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் திருமதி சத்தியேந்திராவும் பாடசாலை அதிபர் திருமதி செலவாரஜீம் இல்லத்தலைவியிடம் வெற்றி கேடயத்தை வழங்கினார்கள். இந் நிகழ்வில் முன்னாள் கல்விப்பணிப்பாளர்கள் உதவி கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசர்கள் அயல் பாடசாலை அதிபர்கள் பாடசாலை பிரதி அதிபர் உப அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர் 

 

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை