உலகெங்கும் 34,005 பேர் மரணம்; 7,22,289 பேருக்கு நோய்த் தொற்று!

பத்து நாடுகளிலேயே அதிக உயிரிழப்புகள்!

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று வரை உலக அளவில் 34,005 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிரிழப்பை சந்தித்த 10 நாடுகள் இவையாகும்.

இத்தாலியில்தான் மிக அதிகமாக 10,779 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் 6803 பேரும், சீனாவில் 3308 பேரும், ஈரானில் 2640 பேரும், பிரான்ஸில் 2611 பேரும் இறந்துள்ளனர்.

அதேவேளையில், தற்போது அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் அமெரிக்காவில் 2493 பேரும், பிரிட்டனில் 1231 பேரும், ஜெர்மனியில் 541 பேரும், நெதர்லாந்தில் 772 பேரும், பெல்ஜியத்தில் 431 பேரும் உயிரிழந்துள்ளனர்

உலகை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால், உலக அளவில் நேற்று வரை 7,22,289 பேர் பாதிப்படைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மருத்துவமனைகளுக்குத் தேவையான 'வென்டிலேட்டர்கள்' எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகளை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அரசுகள் வாங்கி வருகின்றன. கொரோனா நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை இந்த செயற்கை சுவாசக் கருவிகளே வழங்குகின்றன

பிரிட்டனில்உள்ள பல ஊழியர்கள் அங்குள்ள நிறுவனங்களில் சமூக விலகல் மேற்கொள்ளப்படுவதில்லை என்று அச்சம் கொள்கிறார்கள். அதாவது மக்கள் வரிசையில் நிற்கும் போதும், பணியிடங்களிலும் குறைந்த பட்சம் 2மீட்டர்கள் இடைவெளி விட்டுத் தள்ளி இருக்குமாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால்,பல நிறுவனங்கள் இதனைக் கடைப்பிடிப்பதில்லை என ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஏறத்தாழ 1000 ஊழியர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் 1500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அந்நாட்டின் முக்கிய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா தொற்றால் பாகிஸ்தானில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற போதிலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பங்களாதேசில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும் என அந்நாட்டின் வீதிகளில் தாங்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப் போவதாக  இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை லாகோஸ் மற்றும் அபுஜா உள்ளிட்ட நகரங்களை நைஜீரியா நாட்டு ஜனாதிபதி முஹம்மது புஹாரி, முழுமையாக முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்ட தடை காலம் 14 நாட்களுக்கு மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக இடங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களையும் மூட வேண்டும், மருத்துவமனைகள் மற்றும் உணவு கடைகள் மட்டுமே இயங்கும் என்றும் புஹாரி கூறியுள்ளார்.

சீனாவில் தொடர்ந்து நான்காவது நாளாக  கொரோனா வைரஸால் புதியதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நேற்று (திங்கட்கிழமை) சீனாவில் புதியதாக 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 30 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாவர்.

ஞாயிற்றுக்கிழமை சீனாவில் புதிதாக 45 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகஅந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்திருந்தது.

மேலும், நான்கு பேர் இந்த நோய்த் தொற்றின் காரணமாக உயிரிழந்ததையும் சேர்த்து சீனாவில் இதுவரைமொத்தம் 3,304 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 60 இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் அடுத்த ஆறு மாதத்துக்கு அரசு 79 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அந்த நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

'கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அரசு நேரடியாக பணம் வழங்கும். இதன் மூலம், வழக்கம்போல் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து பணியாளர்கள் ஊதியம் பெறுவது உறுதி செய்யப்படும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.  நிலைமையை 

ஜப்பானில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை விட குறைந்த அளவிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் போதிலும், இது வரும் காலங்களில் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில் அதிகாரிகள் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ஜப்பானில்இதுவரை 1,800க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

டோக்கியோ அருகே கடந்த மாதம்நிறுத்தப்பட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 700க்கும் மேற்பட்டோர் மாற்றும் உயிரிழந்த பத்து பேர் இதில் சேர்க்கப்படவில்லை.

Tue, 03/31/2020 - 14:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை