டோக்கியோ ஒலிம்பிக் 2020; அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

டோக்கியோ ஒலிம்பிக் 2020; அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு-Tokyo Olympic 2020 Postponed for Next Year

கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்று காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக் பவுண்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவிடமிருந்து கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இதனை உறுதியாகக் கூற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் இவ்வருடம் ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஓகஸ்ட் 09 ஆம் திகதி வரை இடம்பெற ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கில் தமது விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது நிச்சயமற்றது என, பிரிட்டிஷ் ஒலிம்பிக் சபை கூறியதை அடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியன தாங்கள் இவ்வருட ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என ஏற்கனவே அறிவித்துள்ளன.

Tue, 03/24/2020 - 11:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை