தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 132 பேர் வீடு திரும்பினர்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 132 பேர் வீடு திரும்பினர்-132 More Left From Quarantine Centers

தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த மேலும் 132 பேர் இன்று (30) தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ரைவஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அவதானிக்கும் பொருட்டு, வெளிநாடுகளிலிருந்து வந்த நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டு தங்களது வீடுகளுக்கு அனுப்பும் பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களில் 73 பேர் தியத்தலாவை, 59 பேர் புனானை ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

புனானையிலிருந்து வெளியேறியோர் பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா நாடுகளிலிருந்து வந்த கொழும்பு, மாத்தறை, பதுளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் தேரர் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

இதேவேளை, நேற்று  (29) 77 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வெளியேறியதாக கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது வரை தனிமைப்படுத்தலுக்கு உள்ளான 1,697 பேர் இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சுமார் 2,000 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஷவேந்திர சில்வா நேற்று (29) தெரிவித்திருந்தார்.

Mon, 03/30/2020 - 12:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை