ஈரான் பொதுத் தேர்தலில் பழமைவாதிகள் முன்னிலை

ஈரான் பாராளுமன்றத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில், தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட பழமைவாதிகள் பெரும்பான்மை பலம் பெறும் நிலையில் உள்ளதாக பூர்வாங்க முடிவுகள் தெரிவிக்கின்றன.

290 இடங்களைக் கொண்ட ஈரான் பாராளுமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. அந்த நாட்டில் கடந்த 1979ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் நடைபெற்ற 11ஆவது பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி ஹஸன் ரூஹானியின் மிதவாத மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவு எந்த அளவு உள்ளது என்பதைக் காட்டும் கருத்துக் கணிப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது.

எனினும், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட பழமைவாதிகளின் கையே மேலோங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில், சனிக்கிழமை மதியம் 10.63 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தேசிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முடிவுகளின்படி பழமைவாதிகள் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல மிதவாத வேட்பாளர்களும் தகுதி இழப்புச் செய்யப்பட்ட சூழலிலேயே பழமைவாதிகள் பலம் பெற்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Mon, 02/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை