112 வயதில் உலகின் வயதான ஆண் மரணம்

உலகின் வயதான ஆண் என அண்மையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஜப்பானின் 112 வயது முதியவர் காலமானார்.

1907 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி நிகாடாவில் பிறந்த சிடெட்சு வட்டனபே டோக்கியோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அவரது பராமரிப்பு இல்லம் உறுதி செய்துள்ளது.

அவர் கின்னஸ் புத்தகத்தில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்ற இரு வாரங்களிலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான வட்டனபே “கோபப்படாமல் சிரித்த முகத்துடன் இருப்பதே நீண்ட ஆயுளுக்குக் காரணம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி ஜப்பானின் வயதான ஆண் என்ற சாதனை 110 வயது இசாகு டொமோவிடம் சென்றுள்ளது. எனினும் அவர் கின்னஸ் சாதனைக்கு உரித்துடையவரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் உயிர்வாழும் உலகின் வயதானவர் என்ற சாதனை ஜப்பானின் 117 வயது மூதாட்டி கானே டனகாவிடம் உள்ளது. உலகின் அதிக ஆயுட்காலம் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.

Wed, 02/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை