சந்திரகாந்தனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இடையூறாகச் செயற்படும் நிலையிலும் அவரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விடுதலை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர்:

முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராகத் தான் செயற்படுகின்றது . என்னை பொறுத்தவரையில் சந்திரகாந்தன் தொடர்பான வழக்கில் அவரது குற்றம் நிரூபிக்கப்படவில்லை . கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேடையில் வைத்து விடுதலையை பரிசீலிப்போம் என வாக்குறுதி வழங்கியிருந்தார். அதுமட்டுமல்ல கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தி கொடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளையும் வழங்கியிருந்தார்.

அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் சந்திரகாந்தனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். அதை ஒரு சிறந்த விடயமாக பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

குறித்த வழக்கு மீதான விசாரணை ) மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லாஹ் முன்னிலையில் விசாரணைக்காக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பெப்ரவரி மாதம் 25ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. குறித்த வழக்கு நடவடிக்கைக்கு வருகைதரும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியளாளர்களிடம் விரைவில் சந்திப்போம் என கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 01/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை