பாராளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து இடம்பெறும்

எதிரணி குற்றஞ்சாட்டுவது போன்று பாராளுமன்றம் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்படாது. 7ஆம் திகதியும் எதிர்வரும் வாரங்களிலும் பாராளுமன்றம் கூடும் என சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்துபசாரத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

சபை முதல்வராக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். பாராளுமன்றத்தை பலப்படுத்தவும் அரசின் புதிய திட்டங்களை முன்னெடுக்கவும் பங்களிப்போம். மார்ச் மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும். புதிய எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். நம்பகரமான நாட்டை உருவாக்கவும் வளமான நாட்டை கட்டியெழுப்பவும் நவடிக்கை எடுப்போம்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை அரசின் முழுமையான எதிர்கால நோக்கை படம்பிடித்துக் காட்டுகிறது.

நாட்டை பள்ளத்தில் இருந்து மீட்கும் பணியை அவர் முன்னெடுப்பார் என்றார்.

Sat, 01/04/2020 - 09:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை