ஆரம்பத்தில் நண்பன்; இப்போது பகைவன்!

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிளாஸ்டிக் அறிமுகமானது. சேதன மூலகங்களின் பல்பகுதிய விளைவாக பிளாஸ்டிக் உருவாகின்றது. பிளாஸ்டிக் மிகவும் இலாபகரமானது. இலகுவான, உக்காத, நிறந்தீட்டக் கூடிய, நீருக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய, எந்தவொரு வடிவமாகவும் இலகுவாக தயாரிக்கக் கூடிய பல்வேறு குண இயல்புகளை பிளாஸ்டிக் கொண்டுள்ளது.

வாகனங்கள், வீடுகள் மற்றும் விமானங்களில் மாத்திரமல்ல விண்வெளி ஓடங்களின் பாகங்களில் மற்றும் யோகட் கரண்டிகள், டொபி உறை, பல் குத்தும் குச்சி என்றெல்லாம் கணக்கிலடங்காத பொருட்களை உற்பத்தி செய்ய பிளாஸ்டிக் உபயோகிக்கப்படுகின்றது.

திண்மமான பொருளான பிளாஸ்டிக் உக்காத தன்மையைக் கொண்டுள்ளது. நூறு, இருநூறு வருடங்கள் அல்ல நானூறு வருடங்களானாலும் உக்காத தன்மையை பிளாஸ்டிக் கொண்டுள்ளது. இப்படியான வேறொரு உற்பத்தி உலகில் எங்குமே காண முடியாதது. அதேபோல் உலகம் பூராவும் பாவனையாளர்களுக்கான உற்பத்திப் பொருட்களுக்கான பிரதான மூலப்பொருளாகவும் பிளாஸ்டிக் மாறியது.

பிளாஸ்டிக் மக்களை நன்றாக ஈர்த்துள்ளது. ஒரு தடவை மாத்திரம் பாவித்த பின்னர் வீசியெறியும் பொருட்களாகவும் சந்தைக்கு அவை வந்தன.

பொலித்தீன் பைகள், யோகட் கோப்பைகள், பலவிதமான பக்கெட்டுகள் என மனிதனின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றத் தேவையான ஒன்றாக பிளாஸ்டிக் மாறி விட்டது. ஒரு சில நாட்கள் கூட மனிதனால் பிளாஸ்டிக் இன்றி வாழ்வது இலகுவல்ல என்ற நிலைமை இன்று தோன்றியுள்ளது.

பிளாஸ்டிக் சிறிய தேவைக்குப் பயன்படுத்தப்பட்ட பின்னர் குப்பைக் கூடைக்குள் போடப்பட்டு பின்னர் சூழலுக்கு வெளியேற்றப்படுகின்றது.

செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் இவ்வாறான உக்காத பொருட்கள் தொடர்ச்சியாக சூழலுக்கு விடப்படுவதால் பூமி வேகமாக பிளாஸ்டிக்கால் விழுங்கப்பட்டு வருகின்றது. காடுகள், ஆறுகள் குளங்கள், வாய்க்கால்கள் எல்லாம் பிளாஸ்டிக்கால் நிறைந்துள்ளன.

மீதொட்டமுல்ல, புத்தளம், முத்துராஜவெல மாத்திரமல்ல சிவனொளிபாத மலையிலும் இன்று அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை காணக் கூடியதாகவுள்ளது. முழு உலகிலும் கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை இடும் நாடுகள் மத்தியில் இலங்கை ஐந்தாவது இடத்திலுள்ளது.

அதனால் நாம் உடனடியாக செயல்பட வேண்டும். பிளாஸ்டிக்கை மையமாகக் கொண்டு செய்யப்படும் உற்பத்தி மற்றும் பாவனை பொருளாதாரத்தை உடனடியாக மறுபக்கத்திற்கு மாற்ற முடியாது.

நாம் ஒன்றொன்றான சிறிய தீர்வுகளைக் கண்டு பிளாஸ்டிக்கை மீள்சுழற்சி செய்ய வேண்டும். சூழலைப் பாதிக்காத உக்கக் கூடிய மூலப் பொருட்களை பாவித்து மீண்டும் மீண்டும் பாவிக்கக் கூடிய பொருட்களை சந்தைக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

பிளாஸ்டிக் என்னும் பாரிய வியாபாரத்தில் வருடமொன்றிற்கு 350 மில்லியன் மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகின்றது. மொத்த உலக மக்கள் தொகையின்படி பார்த்தால் ஒரு மனிதனுக்காக சுமார் 50 கிலோ பிளாஸ்டிக் வருடாந்தம் தேவைப்படுகின்றது. நீங்கள் 75 வருடங்கள் இப்பூமியில் வாழ்ந்தால் (50 X 75) உங்கள் பெயரால் 3750 கிலோ கிராம் பிளாஸ்டிக்கை இவ்வுலகில் விட்டுச் செல்கின்றீர்கள். அந்த பிளாஸ்டிக்கின் அளவு உங்கள் மரணத்தின் பின்னரும் முன்னூறு, நானூறு ஆண்டுகளோ அதையும் விட கூடிய காலத்துக்கோ இப்பூமியில் எங்கேயும் காணப்படும். பிரச்சினையின் தீவிரம் தற்போதாவது உங்களுக்கு தெளிவாகியிருக்கும்.

இதனைக் கட்டுப்படுத்த பிளாஸ்டிக்கை எரிப்பது யோசனையாக காணப்படுகின்றது. ஆனால் அதுவும் ஆபத்தானது. பிளாஸ்டிக்கை எரிப்பது என்பது ஐதரோகுளோரிக் அமிலம், சல்பர்டையொக்சைட், டயொக்சின், பியூரான் மற்றும் உலோகங்கள் அதிகளவிற்கு வாயு மண்டலத்துக்கு விடுவிக்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தும். அவை அதிக நச்சுத் தன்மை வாய்ந்தவை. அதன் மூலம் சுவாசப்பை நோய்கள் ஏற்படும். நோயெதிர்ப்பு சக்தி குறையும். மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.

அது மாத்திரமல்ல ஓசோன் படலம் பாதிப்படைதல், புவி வெப்பம் அதிகரித்தல் போன்ற புவியின் இயக்கத்துக்கு அச்சுறுத்தலாகும் பௌதிக மாற்றங்களும் ஏற்படலாம். அதனால் பிளாஸ்டிக்கை எரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

அதனால் நீங்கள் உங்கள் உலகத்தைப் பற்றி இதை விட அக்கறையுடன் சிந்திக்க வேண்டும். சுதந்திர வர்த்தக பொருளாதார முறை உலகில் கோலோச்சும் இன்றைய யுகத்தில் உற்பத்தியாளரை கட்டுப்படுத்தி பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்க முடியாது. அதைச் செய்யக் கூடிய ஒரே வழி பாவனையாளர்களாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது. தேவை உங்களுடையது. அவசியமும் உங்களுடையது. வர்த்தக சந்தை கேள்வியை முடிவு செய்யும் சான்றும் உங்களுடையதே.

ஆகவே பாவனையாளர்களால் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் நிராகரிக்கப்பட வேண்டியுள்ளது. உங்களுக்காக உற்பத்தி செய்யப்படும் 3750 பிளாஸ்டிக் கிலோ கிராமை அப்போதுதான் குறைக்க முடியும். அதனை குறைப்பதன் மூலம் அதனுடன் இணைந்ததாக நீங்கள் மரணமடைந்தால் இவ்வுலகில் அழகான ஒரு நாளையாவது உதிக்கச் செய்ய முடியும். உங்களுக்கு உயிர் அழித்த இவ்வுலகத்திற்கு நன்றி செலுத்த உங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் இதுவே. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் அளிக்கும் உலகமும் அதுதான்.

டொக்டர்

பெதும் கார்னர்

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை