சுதந்திரக்கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்ைக

முன்னாள் ஜனாதிபதியை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்காக கட்சி எம்.பிக்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாெதன சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உபதலைவர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். மார்ச் மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட இருக்கிறது.அடுத்த பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி போட்டியிட இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒழுக்காற்று விசாரணை தொடர்பாக  கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கட்சிக்கு முரணாக செயற்பட்டவர்களுக்கு எதிராக ஏற்கெனவே ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதனை துரிதப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கட்சி ஒழுங்கை மீறிய எம்.பிக்கள், அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிராக துரிதமாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தவறு செய்தோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் பதிவியிலோ வேறு பதவிகளிலோ வெற்றிடம் வந்தால் அதற்கு தேவைக்ேகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒருவரை நியமிப்பதற்காக இன்னொருவரை நீக்கும் தேவை எமக்குக் கிடையாது.

இது தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம் என்றும் கூறினார்.

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை