ஆண்கள் சம்பியன் களனி; பெண்கள் சம்பியன் மொரட்டுவை பல்கலை

ஆண்கள் சம்பியன் களனி; பெண்கள் சம்பியன் மொரட்டுவை பல்கலை-Volleyball Champions

களனி பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி பிரிவு ஏற்பாடு செய்த பல்கலைக்கழகங்களுக்கிடையிலான அழைப்பிதழ் ஆறாவது “கிரிப் டு கிரிப்” வருடாந்த கரம் சுற்றுப் போட்டியில் ஆண்கள் அணிக்கான வெற்றிக்கிண்ணத்தை களனி பல்கலைக்கழகம் பெற்றுக் கொண்ட அதேவேளை மொரட்டுவை பல்கலைக்கழம் பெண்கள் அணிக்கான வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.  

இந்தச் சுற்றுப் போட்டியில் சிறப்பான திறமையினைக் காட்டிய களனி பல்கலைக்கழகத்தின் பிரமேத மெண்டிஸ் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்திய தீபிக்கா சாந்தகுமார் ஆகியோர் சிறந்த கரம் விளையாட்டு வீரர், வீராங்கனைக்கான விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். முதல் தடவையாக இந்தச் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளும் புதிய போட்டியாளர்களிடையே சிறந்த கரம் வீரர் வீராங்கனையினைத் தெரிவு செய்வது இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, இவ்வருட சிறந்த கரம் வீரர் வீரர்களாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கெமிந்த சங்க மற்றும் தீபிக்கா சாந்தகுமார் ஆகிய இருவரும் தெரிவாகி விருதினைப் பெற்றுக் கொண்டனர். தீபிக்கா சிறந்த வீரராகவும், சிறந்த புதிய வீரராகவும் தெரிவானார். மொரட்டுவை பல்கலைக்கழக மனுக அசேன் “வைட் ஸ்லேம்” (எதிர் போட்டியாளருக்கு சந்தர்ப்பம் வழங்காது போட்டியை நிறைவு செய்தல்) பதிவு செய்து சுற்றுப் போட்டியில் பிரகாசித்தார்.  

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இந்த அழைப்பிதழ் கிரிப் டு கிரிப் வருடாந்தச் சுற்றுப் போட்டியானது களனி பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி பிரிவினால் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, இப்போட்டிகள் இரண்டு நாட்களாக களனி பல்கலைக்கழகத்தின் தர்மசோக மண்டபத்தில் இடம்பெற்றது. அத்துடன் இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தி சுமார் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்தச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.  

இச்சுற்றுப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு களனி பல்கலைக்கழத்தின் சிரேஸ்ட பேராசிரியர் எஸ். ஆர். டி. காலிங்க முதலியின் தலைமையில் இடம்பெற்றதோடு, வெற்றியாளர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு, களனி பல்கலைக்கழக பதில் உடற்கல்வி பணிப்பாளர் ஜீ. ஜீ. யூ.சமன் குமார, சிரேஸ்ட பேராசிரியர் எச். ஆர். எஸ். சுலோச்சனி, இலங்கை கரம் சம்மேளனத்தின் தலைவர் பராக்கிரம பஸ்நாயக்க, களனி பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி பிரிவின் பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டுக் கழக பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான போட்டியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.  

போட்டி முடிவுகள் வருமாறு, 
ஆண்கள் அணி 
சம்பியன் - களனி பல்கலைக்கழகம்  
பிரமேதா மெண்டிஸ், எம். சி. எஸ். மதுவந்த, சஞ்ஜய லக்மால், விஸ்வஜித் ஜீவந்த,   நுவன் இந்திரஜித். 

இரண்டாம் இடம் - மொரட்டுவை பல்கலைக்கழகம் 
எம். எச். மனுக அசேன் டி. சில்வா, கே. எச். கே. எஸ். விஜேசேகர,  
கே. பீ. கே. எச். தயானந்த, டப்ளிவ். ஜீ. வை. எஸ். மதுசான், எல். எம். வீ. பிரிமால். 

மூன்றாமிடம் - திறந்த பல்கலைக்கழகம்  
எஸ். எச். டி. ஜயதீப், டீ. எம். டீ. எஸ். பெர்னாண்டோ, ஐ. டப்ளிவ். ஏ. சீ. இமதுவ,  ஆர். எம். ஐ. ஈ. ரத்நாயக்கா, கே. ஜீ. பீ. ஜீ. பீ. ஏக்கநாயக்கா, கே. சந்துன் தாரகா, திலுசா தில்ருஜித் 

பெண்கள் அணி
சம்பியன்  - மொரட்டுவை பல்கலைக்கழகம்

கே. டப்ளிவ். டி. ஜயசிங்க, எம். எம். எஸ். எம். ஹேரத், தீபிக்கா சாந்தகுமார், ஏ. டீ. டீ. கே. நந்ததாச, ஜே. எம். ஜே. றியானா, எல். எல். சீ. எச். ஆர். டி சில்வா. 

இரண்டாம் இடம் - களனி பல்கலைக்கழகம் 
ஏ. டீ. டீ. கே. நந்ததாச, சீ. எச். எம். டப்ளிவ். மதுராங்கனி,   இஸட். வை. ஜே. முஹம்மட், கே. எஸ். டப்ளிவ். கமகே, ஜீ. எஸ். ரத்நாயக்கா. 

மூன்றாமிடம் - கொழும்பு பல்கலைக்கழகம் 
டப்ளிவ். ஏ. மது கல்பணி, பீ. என். டி. ஜே. பிரபோதய, டப்ளிவ். எஸ். வை. ஜயதி திலக்னா, எம். ஹர்சனி உபேக்சிகா, கே. பீ. எல். பீ. எஸ். ஆர். குமாரி, டீ. எம். எச். எஸ். திசாநாயக்கா, எம். ஏ. எல். ஏ. பெரேரா.   
(புத்தளம் விசேட நிருபர்)  

Thu, 12/26/2019 - 11:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை