விஷேட தேவையுடையோர் விளையாட்டு போட்டி

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் முதன்முறையாக நடைபெற்ற அகில இலங்கை விஷேட தேவையுடையோர் விளையாட்டு போட்டியில் சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயம் தேசிய ரீதியில் மூன்று தங்கம் உட்பட எட்டு இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது

கேட்டல் குறைபாடுடைய 18 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தல் போட்டியில் ரீ.எம்.றைஹான்- கேட்டல் குறைபாடுடையோருக்கான 14 வயதுக்குட்பட்ட தடைதாண்டல் போட்டியில் எஸ்.நுஸ்ரத் வீவீ- 14 வயதுக்குட்பட்ட நின்று நீளம் பாய்தல் போட்டியில் ஏ.ஆர்.இம்ஸான் ஆகியோரே மேற்படி விளையாட்டு விழாவில் முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.

கொழும்பு சுகததாஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் அல்-அர்சத் மகா வித்தியாலயத்திற்கு 5 இரண்டாம் இடங்கள் கிடைத்துள்ளன.

14 வயதுக்குட்பட்ட 500 மீற்றர் மற்றும் 30 மீற்றர் ஓட்டத்தில் ஏ.ஆர்.இம்ஸானும் 18 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தலில் எம்.ஐ.எம்.முஜீபும் 22 வயதுக்குட்பட்ட தடைதாண்டல் போட்டியில் ஏ.எல்.றிஸ்வானும் 14 வயதுக்குட்பட்ட நீளம் பாய்தலில் எஸ்.நுஸ்றத் வீவீயும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இவ் வெற்றிக்காகத் தம்மை அர்ப்பணித்து பல்வேறு ஒத்தாசைகளை வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம்- விஷேட தேவைப் பிரிவுக்கும் பொறுப்பான ஆசிரியர் எம்.ஐ.றியாட்- பயிற்றுவிப்பாளர்களான எம்.ஐ.எம்.தாரிக்- எம்.சிறாஜ் மற்றும் விஷேட தேவைப்பிரிவோடு தொடர்பபட்டு ஆசிரியர்கள்- சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் ஆகியோருக்கு பாடசாலை அதிபர் எம்.அப்துல் றஹீம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

(பெரியநீலாவணை தினகரன் நிருபர்)

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை