ரயில் டிக்​கெட் விற்பனையில் பாரிய மோசடி

1,500ரூபா பெறுமதியான முதலாம் வகுப்பு ரயில் டிக்கெட்டை 6ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யும் பாரிய மோசடி தொடர்பில் விசேட ரயில் விசாரணை பிரிவினூடாக விசாரணை நடத்த இருப்பதாக புகையிர சேவைகள் இராஜாங்க அமைச்சர் சீ.பி ரத்னாயக்க தெரிவித்தார். 

சுமார் 10வருடங்களாக தனியார் சுற்றுலாத்துறை நிறுவனம் ஒன்றினூடாக இந்த மோசடி நடந்துள்ளதோடு இதனுடன் ரயில்வே அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், 2020முதல் செயற்திறனான ரயில் சேவையொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் உரிய நேரத்திற்கு ரயில் சேவைகளை மேற்கொள்ளவும் குறைபாடுகளை நீக்கி மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்கவும் இருப்பதாக கூறினார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ரயில்வே திணைக்கள இணையத்தளம் செயலிழந்துள்ளதால் அதனூடாக மக்களுக்கு ரயிலில் டிக்​ெகட் ஒதுக்க முடியாதுள்ளது.இந்த நிலையில் தனியார் நிறுவனமொன்றினூடாகவே டிக்ெகட்டுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.குறித்த நிறுவனம் முதலாம் தர வகுப்பு 1500ரூபா டிக்​ெகட்டுகளை மொத்தமாக பெற்று அவற்றை வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 6ஆயிரம் ரூபாவிற்கு விற்று பாரிய மோசடி செய்து வருகிறது.இதனால் ஜனவரி மாதத்தில் கூட எவருக்கும் டிக்ெகட் முன்பதிவு செய்ய முடியாதுள்ளது. நீண்டகாலமாக நடைபெற்ற வரும் இந்த மோசடி தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.கொழும்பு _ -கண்டி முதலாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி டிக்கெட் ஒதுக்கீட்டிலே இந்த மோசடி தொடர்ச்சியாக நடந்துள்ளதோடு ஏனைய ஆசன ஒதுக்கீட்டிலும் மோசடி நடந்துள்ளதா என ஆராயப்படும். இதற்காக ரயில் விசேட விசாரணை பிரிவை பலப்படுத்த இருப்பதோடு ரயில் திணைக்களத்தில் நடைபெறும் ஏனைய மோசடிகள் தொடர்பாகவும் விசாரணைகள் முடக்கிவிடப்படும்.  

தனியார் நிறுவனத்திற்கு எவ்வாறு அனைத்து டிக்கெட்டுகளும் வழங்கப்பட முடியும். மூன்றாம் தரப்பில் யாருக்கு பெருந்தொகை சென்றுள்ளது. எதிர்கா லத்தில் ஒரு அடையாள அட்டைக்கு ஒரு டிக்கெட் வழங்கும் முறை கொண்டுவரப்படும்.ஒன்றாக பலர் செல்வதானால் அனைவரினதும் அடையாள அட்டைகளை பதிவு செய்ய வேண்டும்.  

இது தவரி வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்தே டிக்கெட்டுகளை பெற வசதி அளிக்கப்படும்.பிரதான ரயில் நிலையங்களிலும் இவ்வாறான வசதிகளை அளிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்.  

இதேவேளை,  ரயில் சேவையை செயற்திறன்மிக்கதாக மாற்றவும் ரயில் நிலையங்களை பசுமை ரயில் நிலையங்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சகல ரயில் நிலையங்களிலும் ஜீ.பி.எஸ்.தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருப்பதோடு சீ.சி.டிவி கெமராக்களும் பொருத்தப்படும். ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்கவும் ஏனைய வசதிகளை மேம்படுத்தவும் இருக்கிறோம்.  

ரயில் சேவைகள் தாமதமின்றி செயற்படுத்தப்படும்.ரயில் சாரதிகள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். எதிர்காலத்தில் வேலைநிறுத்தங்கள் நடந்து மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவது மட்டுப்படுத்தப்படும். மக்களின் பிரச்சினைகள் முன்வைக்க அவசர அழைப்பு இலக்கமொன்றை அறிமுகம் செய்ய இருக்கிறோம். ஜனாதிபதி என்மீது நம்பிக்கை வைத்து இந்த அமைச்சை வழங்கியுள்ளார்.அதனை காப்பாற்றுவேன் என்றும் கூறினார்.(பா)

ஷம்ஸ் பாஹிம் 

 

 

Fri, 12/27/2019 - 08:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை