இரண்டாம் நாளில் மழைகுறுக்கீடு இலங்கை அணி 6 /263 ஓட்டங்கள்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சீரற்ற கால நிலை காரணமாக இரண்டாவது நாள் ஆட்டம் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்றது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியநிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு பகல் உணவுக்காக வீரர்கள் சென்றனர்.பின்னர் மழை விட்டு போட்டி ஆரம்பமானது.இலங்கை அணியின் மற்றொரு விக்கெட் வீழ்த்தப்பட்டது.இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் நிரோசன் திக்வெல்ல 33 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவர் முதல் நாள் ஆட்ட நிறைவடைந்த போது 11 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.நேற்று அவரால் 22 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது. மற்றொரு வீரரான தனஞ்சய டி சில்வா முதல் நாளில் 38 ஓட்டங்கள் பெற்றார்.நேற்று டெஸ்ட் போட்டியில் தனது 6ஆவது அரைச்சதத்தை பதிவு செய்தார்.இலங்கை அணி சார்பாக 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தனஞ்சய டி சில்வா 72 ஓட்டங்களுடனும் டில்ருவன் பெரேரா 2 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

பந்துவீச்சில் சஹீன் அப்ரிடி ஒரு விக்கெட்டை பதம் பார்த்தார். முழுநாளும் 18.2 ஓவர்கள் மாத்திரம் பந்து வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று 9.45 மணிக்கு ஆரம்பமாகும்.

பாகிஸ்தானில் 2009 பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பின்னர் முதற் தடவையாக டெஸ்ட் போட்டி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.இத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்படமை குறிப்பிடத்தக்கது.முதல் நாளில் சுமார் 3 மணித்தியாலங்கள் போட்டி தடைப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

Fri, 12/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை